Sunday, November 20, 2011

Abu Talib, the Maha Brahmin, who protected Prophet Muhammad(pbuh) for 42 years(English and Tamil)

Abu Talib, the Maha Brahmin, who protected Prophet Muhammad(pbuh) for 42 years(English and Tamil): 

Our beloved Prophet(pbuh) became an orphan in a very young age. His father, Abdullah, died a short while before he was born. His mother died, when he was six years of age. So, his uncle, Abu Talib took care of him.

Abu Talib's love for his nephew increased day by day because of his good manners and great politeness.
-------------------------

Out of 10 uncles of Prophet Muhammad(pbuh), 8 didn't accept Islam. When Prophet Muhammad(pbuh) pleaded his Maha Brahmin uncle Abu Talib who protected him for 42 years to accept Islam in his death bed, Allah revealed the verses:

1.Let there be no compulsion in religion.
2.If it had been your Lord’s will, all of the people on Earth would have believed. Would you then compel the people so to have them believe? (Quran 10:99)
3.The Messenger’s duty is but to proclaim the Message. (Quran 5:99).

Prophet Muhammad(pbuh) loved his Maha Brahmin uncle Abu Talib deeply despite the fact that he did not accept Islam

 ----------------------------------

பெருமானாரை(ஸல்) 42 வருடங்கள் பாதுகாத்து வளர்த்த மஹாபிராமின் அபுதாலிப்:

புனித கஃபாவில் 2500 வருடங்கள் 360 சிலைகளை வைத்து சிலைவணக்கம் செய்த குறைஷிக்களின் மிகப்பெரிய தலைவராக அபுதாலிப் மதிக்கப்பட்டார். இவர் பெருமானாரின்(ஸல்) சொந்த பெரியப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தந்தையை இழந்து, 6 வயதில் தாயையும் இழந்து பிறகு 8 வயதில் பாட்டானார்(தந்தையின் தந்தை) அப்துல் முத்தலிபையும் இழந்து அனாதையாகி விட்டார் பெருமானார்(ஸல்). அவரை 50 வயது வரை, 42 வருடங்கள், பாதுகாத்து வளர்த்தார் பெரியப்பா மஹாபிராமின் அபுதாலிப்.

ஒரு முறை 9 வயது சிறுவர் பெருமானாரை(ஸல்) அழைத்துக் கொண்டு அபுதாலிப் வியாபார விஷயமாக சிரியா சென்றார். ஒரு கிருத்துவ தேவாலயத்துக்கு அருகே அமர்ந்து ஓய்வெடுக்கையில், அங்கிருந்த கிருத்துவ பாதிரியார் புஹைரா பெருமானாரை உற்று நோக்கினார். அப்பொழுது இயேசு அறிவித்திருந்த தீர்க்க தரிசனம் அவருக்கு ஞாபகம் வந்தது.

அபுதாலிபிடம் சென்று "இந்த சிறுவனின் பெயரென்ன" என்று கேட்டார். 
"முஹம்மத்(ஸல்)" என்று அபுதாலிப் பதிலளித்தார். 

"இவர்தான் இயேசு பெருமான் அறிவித்த இறைத்தூதர் முஹம்மத்(ஸல்). இவரை மிகப்பத்திரமாக பாதுகாத்து வளர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு" என்று கூறினார். அன்று முதல் மஹாபிராமின் அபுதாலிப் பெருமானாரை(ஸல்) கண்ணும் கருத்துமாக தனது இறுதி மூச்சு வரை பாதுகாத்து வளர்த்தார்.
----------------------------

அபுதாலிப் மரண படுக்கையில் இருக்கும் பொழுது அவரை சந்திக்க பல பெரும் குறைஷி பிராமின் தலைவர்கள் வந்தனர். அவர்கள் அபுதாலிபிடம் "இப்பொழுதாவது இவரை(பெருமானாரை(ஸல்)), இஸ்லாமிய பிரச்சாரத்தை விட்டு எங்களோடு ஒன்று சேர சொல்லுங்கள். சிலைவணக்கத்தை விட்டுவிட்டால் எங்கள் பிழைப்பு என்னாவது?" என்று கேட்டனர்.

இதைக்கேட்ட அபுதாலிப் மிகவும் மனம் வருந்தி கண்களை மூடிக்கொண்டார். 

அபுதாலிப் மரண தருவாயில் இருக்கும் பொழுது பெருமானார்(ஸல்) அவரை "லாயிலாஹா இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று ஷஹாதா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று மன்றாடினார். அப்பொழுது "நான் விரும்பினாலொழிய யாரையும் உங்களால் இஸ்லாத்தை ஏற்க வைக்க முடியாது" என்று ஏக இறைவன் அல்லாஹ்வின் அறிவிப்பு வந்தது. 

அபுதாலிபின் உயிர் பிரிந்ததும், பெருமானார் குனிந்து அவரது நெற்றியில் முத்தமிட்டார். பிறகு அபுதாலிபின் புதல்வர் மாவீரர் அலியை(ரலி) கட்டிப்பிடித்து அழுதார்.

இஸ்லாத்தை எற்காவிட்டாலும், மஹாபிராமின் அபுதாலிபை முஸ்லிம்கள் மிகவும் மதிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment