Tuesday, November 27, 2012

நெஞ்சில் ஓர் ஆலயம்

நெஞ்சில் ஓர் ஆலயம்

ஓ தருமதேவா !. உணர்ச்சிவசப்படாதே. உண்மையை சொல்கிறேன் கேள்

 பழைய பஞ்சாங்கம் செல்லரித்துவிட்டது. வர்ணத்தின் சாயமும் வெளுத்துவிட்டது
சாம தான பேத தண்டத்தை சாண‌க்கியன் கற்றுத்தந்தான்
த‌ருமத்தை திரித்து தருமயுத்தமும் செய்யவைத்தான்

நாலும் தெரிந்துவிட்டது, ஞானம் பிறந்துவிட்டது

பாவமூட்டையுடன் புனிதயாத்திரையா? காதடைத்தபின் கதாகாலட்சேபமா?
போதகரின் பிரச்சாரம் புளித்துவிட்டது
பண்டிதரின் பஜனையும் படுத்துவிட்டது

உடைத்துவிடு தடைகளை

கிழித்துவிடு திரைகளை
உடைந்த உள்ளங்கள் ஒன்றுசேரட்டும்
அலைபாயும் மனங்கள் அமைதி கொள்ளட்டும்


தயங்காதே வா ! ஒன்றுசேர்வோம்
நெஞ்சில் ஓர் ஆலயம் அமைப்போம்
அத‌ன் கலசம் வானை முட்ட‌ட்டும்
அதில் அன்பெனும் நாத‌ம் ஒலிக்க‌ட்டும்

நீ காணும் இந்தியாவில் இந்தியன் வாழ்கிறான்
நான் காணும் இந்தியனில், இந்தியா வாழ்கிறது.

நீ காண்பது ஓர் இந்தியா
நான் காண்பது ஒவ்வொரு இந்தியனிலும் இந்தியா.

(பேரறிஞர் அல்லாமா இக்பாலின் கவிதையிலிருந்து உருவான சிந்தனை).

No comments:

Post a Comment