Tuesday, November 27, 2012

சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம்

சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம்:

தலித் சூத்திரர் தீண்டத்தகாதவரென பிறந்து இட ஒதுக்கீட்டால் இஞ்சினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயர் பதவிகளை அடைந்தவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே திருமணம் என்று வந்து விட்டால் உயர்ஜாதிப் பெண்களை மணப்பதையே விரும்புகின்றனர், திரு.அம்பேத்கர் உட்பட.  எத்துனை பேர் ஓலைக்குடிசைக்கு சென்று சித்தாள் வேலை செய்து பிழைக்கும் மாமன் பெண் கருப்பாயி, மூக்காயிக்கு தாலி கட்டினர் என்பதை சிறிது ஆய்வு செய்தால் நல்லது.

பிரச்னை என்னவென்றால், திருமணம் செய்த தம்பதியருக்குள் மேல்ஜாதி கீழ்ஜாதி வேற்றுமைகள் உடனே தலைதூக்கி விடுகிறது. "உனது பெற்றோருக்கு தனியாக வீடு வாங்கி கொடுத்து விடு. இங்கே அவர்கள் வரக்கூடாது. நம்மோடு இருந்தால், நமது சமூக அந்தஸ்துக்கு ஒத்து வராது. நீ அவர்களை தனியாக சந்திப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. நமது குழந்தைகளை அழைத்துச் செல்லாதே" போன்ற நிபந்தனைகளை ஏற்று உயர்ஜாதிப் பெண்ணை திருமணம் செய்யும் நிலை. ஒரு அடிமை சாசனத்திலுருந்து விடுபட்டு மற்றொரு அடிமை சாசனம் எழுதித் தரவேண்டிய நிலை.

அப்படியும் பிரச்னை தீர்ந்ததா?. கல்யாணம் காட்சிகளில் மாமனார் வீட்டு ஹை சொசைட்டியினரின் மறைமுக தீண்டாமை. அதிலும் குழந்தைகளின் சாயல், தந்தை வழி மரபணு பக்கம் சென்று விட்டால் கேட்கவே வேண்டாம்.  கூடப் பிறந்த தங்கைகள், அய்யங்கார் வீட்டுக் கல்யாணத்தில் தன்னை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லையே என்று வைதேகி ஆண்டியப்பன் பாத்ரூமில் குமுறிக் குமுறி அழும் நிலை.

"கிரீமி லேயரா?... உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியுமா?.  எனது கணவரின் ஐ.ஏ.எஸ் அதிகாரம் இங்கே செல்லுபடியாகாது.  தடுக்கி விழுந்தால் இந்த சபையில் ஹார்வேர்டும், ஸ்டான்ஃபோர்டும்தான்.  நான் ஒரு நவீன தலித்" என்று எண்ணிக் கொண்டார்.

*************************


அடுத்த வாரம் துபாய் இப்ராஹிம் பாய் பையனின் திருமணம். பெண் மரக்கடை ராவுத்தரின் பேத்தி. பரம்பரை பணக்காரர். 25 வருடங்களுக்கு முன்பு இப்ராஹிம் பாய் எனும் முத்து, எருமை நாயக்கன் பட்டியில் ரோடு வேலை செய்து கொண்டிருந்தார்.


வைதேகி ஆண்டியப்பன் தம்பதியர் திருமண மண்டபத்தில் நுழைந்ததும் "அண்ணா வாங்க, அண்ணி வாங்க, வணக்கம், சலாமலைக்கும்" என்று இரு வீட்டாரும் தடபுடலான வரவேற்பு.


பிரியாணி சாப்பிட்டு வெத்திலை பாக்கு போட்டும் இப்ராஹிம் பாய் விடவே இல்லை. அவர் கட்டிய புது பள்ளிவாசலை அழைத்துச் சென்று காண்பித்தார். பள்ளியின் நுழைவு வாயிலின் அருகே கல்வெட்டில் "எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயரால் இந்த பள்ளியை கட்டியவர் ஜனாப்.இப்ராஹிம் பாய். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே" என்று எழுதப் பட்டிருந்தது. ஏனோ தெரியவில்லை.. வைதேகி ஆண்டியப்பன் தம்பதியருக்கு யாரோ சம்மட்டியால் அடித்தது போன்ற உணர்வு. ஒருவரை ஒருவர் மௌனமாக பார்த்துக் கொண்டனர்.


இப்ராஹிம் பாயிடம் பிரியா விடை பெற்று வீட்டுக்கு திரும்பும் வழியில், பள்ளியிலிருந்து "அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்.." எனும் தொழுகை அழைப்பு. "ட்ரைவர்..ஒரு நிமஷம் காரை திருப்பு" என்றனர் வைதேகியும் ஆண்டியப்பனும் ஒரே குரலில்.


இப்ராஹிம் பாய் பள்ளி நோக்கி கார் திரும்பியது. ஆண்டியப்பனும் வைதேகியும் ஷஹாதா சொல்லி இஸ்லாத்தை தழுவினர். அப்துல்லாஹ் ஆமினா என்று தங்களை அறிவித்தனர். குழந்தைகளுக்கு முஹம்மத், பிலால் என்று பெயர் சூட்டினர். இஸ்லாமிய சகோதரர்கள் "மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்" என்று வாழ்த்து தெரிவித்தனர்.


15 நாள் அலுவல் காரணமாக வெளியூர் சென்று வீட்டில் நுழைந்த திரு.அப்துல்லாஹ் அவர்களுக்கு நம்ப முடியாத அதிர்ச்சி.  20 வருடங்களில் ஒரு முறை கூட வீட்டு வாசப்படி ஏறாத அப்துல்லாஹ்வின் தலித் பெற்றோர் "வாப்பா வா" என்று கண்ணீர் மல்க வரவேற்றனர்


"நீதியைக் காட்டி, நேர்மையை ஊட்டி

நெறிவழி அழைத்தார் நபி பெருமானார்
ஜாதியை பேசி, சடங்குகள் பேசி
சமூகத்தை கெடுத்தார் இருமுறை தாரார்
என்ன காலமோ என் சோதரா
ஏன் எடுத்தாய் இந்த கோலமோ"

No comments:

Post a Comment